பிழைகளும் சரியானவையே !

‘என்னுடைய குழந்தைப்பருவம் இப்படி இருந்தது..’
‘நான் இப்படி இருந்தேன் தெரியுமா..’

இப்படி நம் எல்லோருக்குமே நம்முடைய குழந்தைப்பருவத்திலிருந்து நினைந்து கொள்ளவென்று அழகான நினைவுகள் பலவிருக்கும். மனிதர்கள் எப்போதெல்லாம் அழகாகிறார்கள் என்கிற கேள்வி வருகிற போது பலரின் பதில் குழந்தைப் பருவமாகத்தான் இருக்கும். நாம் குழந்தைப்பருவத்தில் அழகாக இருந்திருக்கிறோம் என்பதை விட சுதந்திரமாக இருந்திருக்கிறோம் என்பதே உண்மை. எத்தனை முறை பிழைகள் நேர்ந்தாலும் நாம் அதைப் பொருட்படுத்தியதே இல்லை. யாருடைய கருத்துக்களையும் நாம் கவனித்ததே இல்லை. அந்தச் சுதந்திரம் தான் நம்மை அழகாக்கியிருக்கிறது.

ஆனால் வளர்ச்சியோடு சேர்த்து அந்தச் சுதந்திரம் ஏன் நம்மைவிட்டுத் தொலைந்துவிட்டது?
ஓரு குழந்தையும் ஒரு வளர்ந்த மனிதனும் ஓரே நேரத்தில் ஓடுகிறார்களென்று வைத்துக்கொள்ளுங்கள். ஒரு கட்டத்தில் இருவருமே தடுமாறி விழுகிறார்களென்றால்.. விழுந்த குழந்தை அழத்துவங்கும். சிறிது நேரத்தில் அழுகையை விட்டுவிட்டு அடுத்த ஓட்டம் பற்றி யோசித்துவிடும். ஆனால் வளர்ந்த மனிதர்கள் விழுந்ததும் அழுவதில்லை. அழுத்தத்திற்குள்ளாகி விடுகிறார்கள். இந்த அழுத்தம் அழுகையை விட ஆபத்தானது. ‘நான் விழுந்துவிட்டேனே மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ’ என்று தான் நாம் யோசிக்கிறோம். இதனால் தான் பிழைகளைத் தோல்வி என்று நாம் புரிந்துகொண்டிருக்கிறோம். இதை Pநசகநஉவழைn என்பார்கள். அதாவது நம்முடைய நடவடிக்கைகள் முழுக்க முழுக்கச் சரியாக இருக்க வேண்டுமெனபதில் தான் நாம் கவனமாக இருக்கிறோம். இந்த முழுமை சார்ந்த எதிர்பார்ப்பு தான் நம்முடைய சுதந்திரத்தை நம்மிடமிருந்து பிரித்துவிட்டது.

நம்முடைய பாதையை நாம் பெரும்பாலும் தீர்மானிப்பதில்லை. மற்றவர்கள் தான் தீர்மானிக்கிறார்கள். மற்றவர்களைவிட அனைத்தையும் சரியாகச் செய்ய வேண்டுமென்று தான் நாம் வாழ்க்கை முழுவதும் ஓடிக்கொண்டிருக்கிறோம்.

உங்கள் முன்னால் சிறகு விரித்துப் பறக்குமொரு பறவையைக் கற்பனை செய்து பாருங்கள். தன்னுடைய பாதை எதுவென்று அதற்குத்தெரியும். தன்னுடைய வானத்தில் தான் மட்டுமே தன்னுடைய பாதையைத் தீர்மானித்து தானே அதை அடைந்கும் விடுகிறது. விலங்குகளிடம் மனிதனிடம் இருக்கிற எந்தவொரு ஆற்றலுமே இல்லை ஆனால் அவைகளிடமிருக்கும் சுதந்திரம் மனிதர்களிடம் இல்லவே இல்லை. அந்தச்சுதந்நதிரம் அவற்றை எத்தனை அழகாக்குகிறது. அங்கு மனிதர்கள் தேடும் முழுமை இல்லை ஆனால் அழகு இருக்கிறது. மனிதனிடம் முழுமை இருக்கிறது. சுதந்திரம் இல்லை அதனால் அந்த அழகும் இல்லை.

நமக்குச் சிறகுகள் இல்லை என்கிற காரணத்தினால் தான் மன எண்ணங்களைக் கொடுத்திருக்கிறான் இறைவன் என்று கவிஞர் வைரமுத்து ஒருமுறை கூறியிருந்தார். எண்ணங்கள் அதியற்புத சக்தி வாய்ந்தவை. கற்பனைகளும் கனவுகளும் மிகப்பெரும் மாற்றங்களை நிகழ்த்தக்கூடியவை. அதனால்த்தான் இளைஞர்களைக் கனவுகாணுங்கள் என்று அப்துல் கலாம் கூறியிருக்கிறார். ஆனால் உங்கள் கனவுகளை உங்கள் தனியுலகத்தில் சிறகடிக்க விடுங்கள. இன்னொருவருடைய வட்டத்துக்குள் நின்று சிறகு விரிப்பது அநாவசியானது.

ஒரே கண்ணாடி ஒரே நேரத்தில் பத்து மனிதர்களுக்குப் பத்து மாறுபட்ட பார்வையைக் காட்டக்கூடியது. உங்கள் பார்வை நீங்கள் எதைப்பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. உதாரணமாக என்னுடைய பார்வையில் நான் சரியாக இருக்கலாம். என்னுடைய நண்பன் என்னைப் பார்க்கிற போது சில பிழைகள் தெரியலாம். இன்னொரு நண்பனுக்கு இன்னும் சில பிழைகள் nதியலாம். இன்னுமொருவருக்கு வேறு. இப்படி நபருக்கு நபர் பார்வை என்பது வேறுபட்டது. அப்படியிருக்கும் போது ஒரு மனிதன் தன்னுடைய சூழலிலிருக்கும் அத்தனை மனிதர்களுக்கும் சரியாகத் தெரியவேண்டுமென்று தன்னைத்தானே தயார் செய்து கொள்ளுவதென்பது அர்த்தமற்றது.

இருபத்தொரு நாட்களுக்கு உங்கள் மனதில் தொடர்ச்சியாக எதை நீங்கள் விதைக்கிறீர்கயோ அது ஆழ்மன அழுத்தமாக மாறி உங்கள் முழு வாழ்வையுமே ஆக்கிரமித்துவிடுமளவு எண்ணவோட்டமகி விடும் என்று பிரபல எழுத்தாளர் ராபின் சர்மா தன்னுடைய நுலொன்றில் கூறியிருக்கிறார். இந்ந நிமிடம் வரை எத்தனை இருபத்தொரு நாட்களை நாம் கடந்திருப்போம். எத்தனை முறை நம் பிழைகளைத் தோல்விகளாக மனதில் பதிய விட்டிருப்போம்.அத்தனையும் சேர்ந்நு நம் மன ஓட்டத்தைத் மாற்றி நம் எண்ணங்களை எப்படியெல்லாம் திசைதிருப்பியிருக்கும்.

நாம் தேடுகிற இந்த முழுமையாகச் சரியான வாழ்க்கை உலகில் யாரிடமுமே இல்லாதவொன்று. நீங்கள் யாரிடமெல்லாம் சரியாகத்தெரியவேண்டுமென்று நினைக்கிறீர்களோ அவர்களும் வேறுயாரிடமோ தங்களைச் சரியாக் காட்டிக்கொள்ளத்தான் முளன்று கொண்டிருக்கிறார்கள். உங்களைத் தவிர வேறு யாரையுமே உங்களால் முழுமையாகத் திருப்திப்படுத்த முடியாது.

முழுமையாகச் சரியான வாழ்க்கை என்பது முற்றிலும் முயற்சியே செய்யாதவர்களுக்கானது. பிழைகள் யதார்த்தமானவையே. அவை தோல்விகளில்லை. உங்கள் பிழைகளை நீங்களே ரசியுங்கள். குழந்தைப் பருவப் பிழைகள் இன்று நினைவுகளாவது போல இன்றைய பிழைகளும் நாளைய நினைவுகளே.

ற.பவிதா

உங்கள் கருத்துக்கள்