சிறகுகள் அமையம் நடாத்தும் மகளிர் தின கட்டுரைப்போட்டி 2020

சிறகுகள் அமையம் – மகளிர் பிரிவினரால் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு இரண்டாவது வருடமாக பாடசாலை மாணவர்களுக்கிடையேயான கட்டுரைப் போட்டி நடாத்தப்படவுள்ளது.

நிபந்தனைகள்

  • கட்டுரைகள் A4 தாளில் ஒரு பக்கத்தில் மட்டும் எழுதப்பட வேண்டும்.
  • நீலம் அல்லது கறுப்பு நிற பேனா மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும்.
  • 1cm இலான வெளிக்கோடு (outline) ஏற்றுக் கொள்ளப்படும்.
  • கொடுக்கப்படும் தலைப்புகளில் ஏதாவது ஒன்றை தெரிவு செய்து எழுதலாம்.
  • கட்டுரைகள் மார்ச் 05 இற்கு முன்பாக கிடைக்கக் கூடியவாறு கீழ்காணும் முகவரியிற்கு அனுப்பி வைக்கவும்.

பங்குபற்றும் அனைவரிற்கும் சான்றிதழ்களும் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பெறுபவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்படும். அனைத்து மாணவர்களையும் போட்டியில் பங்குகொள்ள ஊக்கப்படுத்துமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

போட்டிகள் கீழ்வரும் வயதுப்பிரிவுகளில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

தரம் 3, 4, 5 – வயதுப்பிரிவு 01

சொற்கள் 80-100

01.அம்மாவும் நானும்

02.எனக்குப் பிடித்த சாதனைப் பெண்

03.பெண் தெய்வங்கள்

தரம் 6, 7- வயதுப்பிரிவு 02

சொற்கள் 150-200

01.பெண் குடும்பத் தலைவர்கள் 

02.விளையாட்டுத்துறையில் பெண்களின் வகிபாகம்

03.பெண்பிள்ளைகளும் பெற்றோரும்

தரம் 8, 9- வயதுப்பிரிவு 03

சொற்கள் 200-250

01.பெண் கல்வியின் முக்கியத்துவம்

02.என்னை கவர்ந்த பெண் சாதனையாளர்

  1. ஊடகத்துறையில் பெண்கள்

தரம் 10, 11- வயதுப்பிரிவு 04

சொற்கள் 250-300

01.பெண்களும் பால்நிலை சமத்துவமும்

02.பெண் தற்கொலைகளும் காரணங்களும் 

03.இலக்கியத்தில் பெண்களும் அவர்தம் வகிபாகமும்

தரம் 12, 13- வயதுப்பிரிவு 05

சொற்கள் 300-400

01.பெண் சிசுக் கருக்கலைப்பு

02.இன்றைய காலகட்டத்தில் அரசியலில் பெண்களின் வகிபாகம்

03.தாய்மையின் புனிதமும் நாளைய சமுதாயமும்

திறந்த பிரிவு- வயதுப்பிரிவு 06

சொற்கள் 600-700

01.20ம் நூற்றாண்டின் பின்னர் தமிழ் சூழலில் பெண் கல்வி

02.பால், பாலியல் மற்றும் பெண்ணியம் பற்றிய சமூக நோக்கு

03.பெண்கள், ஆண்கள் மற்றும் மாற்றுப் பாலினத்தவர் தொடர்பில் சமகால பிரச்சினைகளும் தீர்வுகளும்.

 

கட்டுரைகள் அனுப்ப வேண்டிய முகவரி

ஜீவலக்சி பரமசிவம் 

சிறகுகள் அமையம்

கலைவாணி வீதி,

கோண்டாவில் வடக்கு,

கோண்டாவில். 

 

தொடர்புகளுக்கு

ப.ஜீவலக்சி – 0778655674 | பா.பாரதி – 0778415613 

 www.sirakukal.org | sirakukalinfo@gmail.com

உங்கள் கருத்துக்கள்