கிளிநொச்சியில் நடைபெறவுள்ள தொழில் முனைவோர்களுக்கான நிகழ்வு!

டெக்ஸ்டார் அமைப்பின் வணிக புத்தாக்குனர்களுக்கான Startup Weekend நிகழ்வு இலங்கையில் முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் கடந்த  ஜூன் 24ம் திகதி  தொடக்கம் 26ம்திகதி வரை யாழ் ரில்கோ விடுதியில்  நடாத்தப்பட்டது. இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இரண்டாவது நிகழ்வு கடந்த ஒக்டோபர் 6ம் திகதி கொழும்பில் இடம்பெற்றது. அடுத்த 3வது நிகழ்வான Startup Weekend Vanni நிகழ்வு கிளிநொச்சியில் டிசம்பர்  16ம் திகதி  தொடக்கம் 18ம் திகதி வரை யாழ்பல்கலைக்கழக கிளிநொச்சி பொறியில் பீட வளாகத்தில் நடைபெற உள்ளது.

1)Startup என்றால்?
புதிதான ஒரு வணிக ரீதியான எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுத்தல்
 
2)Startup Weekend என்பது?
Techstars அமைப்பினால் 3 நாள் நிகழ்வாக உலகளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்படுகின்ற Startup களுக்கான ஒன்று கூடல் நிகழ்வு
 
3)யார் இந்த Techstar ?
Startup களில் ஈடுபடும் தொழில் முனைவோருக்கான நிதிவளங்களை பெறுபவதற்கு உதவுதல் , அவர்களுக்கு தேவையான வசதிகள் வல்லுனர் உதவிகளை ஒருங்கிணைத்துக்கொடுத்தல் . Startup களினை மேலும் அபிவிருத்தி செய்தல் முன்னேற்ற வேகத்தினை அதிகரித்தல் ஆகிய செயற்பாடுகளை செய்பவர்கள். அவர்கள் Google For Entrepreneurs அமைப்பின் பங்காளிகள்.
 
4)Startup Weekend நிகழ்வில் என்ன நடைபெறும் ?
1ம் நாள் (5.30pm -10pm)
கலந்துகொள்பவர்களிடம் இருந்து வாய்மொழி எண்ண முன்மொழிவுகள் பெறப்படும். பங்குபற்றுபவர்கள் தங்கள் சொந்த மொழியில் கருத்திடடங்களை முன்மொழியலாம்.
அவற்றில் கலந்து கொண்டுள்ளவர்களின் வாக்குகளுக்கு அமைய 10 Startup முன்மொழிவுகள் தெரிவு செய்யப்படும்.கலந்து கொள்பவர்கள் 10 பேர் கொண்ட குழுக்களாக பிரிக்கப்படுவர். பங்குபற்றுபவர்கள் தங்களுக்கு விரும்பிய குழுங்களில் இணைந்துகொள்ளும் வாய்பினை பெறுவர். ஒவ்வொரு குழுவுக்கும் குறைந்தது ஒவ்வொரு நிபுணத்துவம் வாய்ந்த வளவாளர்கள் நியமிக்கப்படுவர். அவர்கள் குழுக்களுக்கான உரிய உதவிகளை வழங்குவார்கள்
 
2ம்நாள் (9am -10pm)
ஒவ்வொரு குழுக்களும் அவர்களுக்கு வழங்கப்பட்ட Startup முன்மொழிவுகளை எவ்வாறு செயற்படுத்துவது அபிவிருத்தி செய்வது செய்து முடிப்பது என்பது தொடர்பில் திட்டங்களை தயாரிப்பர்.மிகக்குறைந்த அளவிலான நிலை வரை Startup மூலம் கொண்டுவரப்படவுள்ள வெளியீடு குறித்து மாதிரியை தயாரிப்பர். அதன்போது குழுவில் உள்ள ஒவ்வொரு தரப்பட்டவர்களும் தங்கள் தங்கள் உதவியினை வழங்குவர்  3ம் நாள் மாலை வரை அது தொடரும்
 
3ம் நாள் மாலை (9am -9pm)
10 குழுவினரும் தங்கள் Startup திட்டங்கள் தொடர்பில் 3 பேர் கொண்ட நடுவர்கள் மத்தியில் Presentation வழங்குவார்கள். இவர்களில் 3 குழு தெரிவுசெய்யப்பட்டு விருது வழங்கப்படும்.மேலதிக உதவிகள் Techstar இனால் வழங்கப்படும். விருது பெறும் Startup கள் Startup Acceleration திட்டத்திற்கு தகுதிபெறும். ஏனைவவை மேம்படுத்தப்படுவதற்கான வாய்புக்கள் கிடைக்கும்
அனுமதி மற்றும் மேலதிக தகவல்களுக்கு இங்கே அழுத்தவும்
உங்கள் கருத்துக்கள்