எமக்கான சந்தர்ப்பங்களை நாம் பயன்படுத்த முன்வரவேண்டும் : தேசிய விருது வென்ற ஈழத்து புகைப்பட கலைஞன் குகரூபன்

இந்த வாழ்க்கை எப்போதும் நமக்குப் பிடித்தமாதிரி அமைவதில்லை, ஆனாலும் வாழ்வில் அரிதாக நிகழும் அபுர்வமான சில தருணங்கள் அற்புதமானவை, அவை கொண்டாட்டத்திற்குரியவை. நமக்குப் பிடித்த வாழ்வின் கணங்களை எமக்குரியதாக்கிக் கொள்வதற்குரிய பக்குவம் வாய்க்கப்பெறுவதற்குச் சில காலங்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது.  இலங்கை தேசிய புகைப்பட விழாவில் இயற்கை மற்றும் வன ஜீவராசிகள் பிரிவில் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்கொண்ட யாழ்ப்பாணம் புகைப்படைக் கலைஞன் த.குகரூபன் அவர்களின் அனுபவ பகிர்வுகள்.

ஒரு புகைப்படக்கருவியை வாங்கியதும், ஒரே நாளில் புகைப்படக் கலைஞனாகிவிடலாம் என்ற “நினைப்பை“ தவறென்று விளங்கிக்கொள்ள சிலகாலம்.

பறவைகளை கமராவினுள் சிறைப்பிடிக்க நல்ல zoom lens வாங்கிவிட்டால் போதுமென்ற கற்பனையை காற்றோடுவிட சிலகாலம்.

பறவைகளின் வகை அறிந்து, அவைதம் வாழ்வியலை உணர்ந்து, பின்தொடர்ந்து நான் அலைந்த இந்த நான்கு வருடங்களில் நான் உள்வாங்கிக்கொண்ட அனுபவங்கள் பெறுமதியானவை. என்னுடைய புகைப்படக் கலை மீதான ஆர்வம் இன்னும் சிலமடங்குகள் பெருக்கிக் கொள்வதற்கான வாய்ப்பாக Nature and Wildlife புகைப்படப்பிரிவில் எனக்குக் கிடைத்த தேசிய புகைப்படவிருதைக் கருதிக்கொள்கிறேன்.

ஏலவே தென்னிலங்கையில் ஆர்வமும் திறமையும் கொண்ட பல்லாயிரம்பேர் இத்துறையில் கோலோச்சுகிறார்கள். எம்முடைய யாழ் மண்ணில் ஒவ்வோர் வருடமும் பறவைகள் படையெடுக்கின்றன. தென்னிலங்கையின் கலைஞர்களும் படையெடுக்கிறார்கள். நாம் வளத்தைக் கொண்டும், திறமையை வளர்க்காமல் “வாய்“ பார்த்து நிற்கிறோம்.

எனக்குக் கிடைத்த இந்த அங்கீகாரத்தை என்னுடைய வாழ்வில் அடைந்த மைல்கல்லாக மட்டும் கருதாமல், எமது மண்ணில் ஆர்வ  முடன் இருக்கின்ற சகோதரர்களுடன் கைகோர்ப்பதற்கும், என்னை அடையாளம் காட்டிய இந்த சந்தர்ப்பம் இத்துறையில் ஆர்வமுள்ளவர்களிற்கும் கிடைக்கவேண்டும் என்றும் விரும்புகிறேன்.

தேசிய விருது வென்ற புகைப்படம்

உங்கள் கருத்துக்கள்