கிளைமத்தோன் – யாழ்ப்பாணம் புகைப்படப் போட்டி

யாழ்ப்பாணத்தில் இரண்டாவது முறையாக இடம்பெறும் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச நிகழ்வான கிளைமத்தோன் நிகழ்வினை முன்னிட்டு  மனிதம் அமைப்பு நடாத்தும் புகைப்படப் போட்டி.

” நாம் எதிர்நோக்கும் சுற்றுச்சூழல் சார் பிரச்சினைகள், அவற்றிற்கான தீர்வுகள் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினைகளை எதிர்நோக்கும் வகையிலான நடவடிக்கைகள்” தொடர்பிலான புகைப்படங்களை எதிர்பார்க்கின்றோம்.

புகைப்படங்கள் சமர்பிக்க இறுதித் திகதி – 06/11/2020
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி –
manithamcomp@gmail.com
  1. புகைப்படத்துடன்
  2. முழுப்பெயர்
  3.  முகவரி
  4. தொலைபேசி இலக்கம்
  5. புகைப்படம் எடுக்கப்பட்ட இடம்
  6. எடுக்கப்பட்ட திகதி
  7. புகைப்படத்திற்கான விளக்கம்                           என்பன குறிப்பிடப்பட வேண்டும்.

    ஒருவர் 5 புகைப்படங்களை அனுப்பிவைக்க முடியும்.புகைப்படங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட சிறுகதையாக இருத்தல் வேண்டும். ( வெற்றியாளர்கள் நடுவர் குழுவால் தெரிவு செய்யப்படும்)

புகைப்படத்தின் அளவு நீளப்பக்கமாக 1920 pixels உயரம் 1080 pixels, (Maximum dimensions  Images, 1920 pixels WIDE by 1080 pixels HIGH)jpeg format ஆகவும்இருக்க வேண்டும்.
புகைப்படக் கண்காட்சி நாட்டின் சூழ்நிலையைப் பொறுத்து நேரடி நிகழ்வாகவோ அல்லது இணைய வழிக் கண்காட்சியாக இடம்பெறும். இதற்குசிறந்த புகைப்படங்கள் தெரிவுசெய்யப்படும்.

ஆர்வமுள்ளவர்கள் தமது புகைப்படத்திறமையை இம்முறை நடைபெறவுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச நிகழ்வில் வெளிக்காட்ட முடியும்.இது புகைப்படப்போட்டி மட்டுமல்ல சூழலியல் சார்ந்த விழிப்புணர்வாகும்

உங்கள் கருத்துக்கள்