புரட்டாதி 17ஆம் திகதி : பதுளை நகரில் ஓர் கலாச்சார புரட்சி – மலைத்தென்றல் 2017

எழில் கொஞ்சும் மலையகத்திலே ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் கம்பீரமாய் உயர்ந்து நிற்கும் மலைகளிடையே இலங்கையின் தேசிய பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஊவா வெல்லஸ்ஸ பல்கழலைக்கழகம் அமைந்துள்ளது. இலங்கைப் பல்கலைக்கழகங்களுள் இறுதியாக ஆரம்பிக்கப்பட்ட இப் பல்கலைக்கழகம் இன்று ஒரு தசாப்தத்தைக் கடந்து ஏனைய பல்கலைக்கழகங்களுக்கு ஈடு இணையாக வளர்ந்து வருகிறது. புராதன சான்றுகள் நிறைந்த பதுளையின் மத்தியில் அமைந்திருக்கும் ஊவா வெல்லஸ்ஸவில்இ ஏறக்குறைய நான்கில் ஒரு பங்கு தமிழ் மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். தொன்மையூம் வீரமும் நிறைந்த தமிழின கலை கலாசாரத்தை பல்கலைக்கழகங்கள் ஒவ்வொன்றும் பல நிகழ்வூகள் மூலமாக கட்டிக்காத்து வருகின்றன.

ஊவா வெல்லஸ்ஸவிலும் தமிழ் கலையூம், கலாசாரமும் மலைத்தென்றல் எனும் பெயரில் வருடா வருடம் தென்றலாய் வீசி வருகிறது. கலை கலாசாரத்தை பேணிக்காப்பதுடன் பல்கலை மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணருவதற்கும் மலைத்தென்றல் மேடையளிக்கிறது. கரகம், கும்மி, காவடியாட்டம், கோலாட்டம், கூத்து, பரதம், நாடகங்கள், நாட்டிய நாடகங்கள் உட்பட மருவி வரும் கலைகளையூம் மேடையேற்றுவது மலைத்தென்றலின் சிறப்பம்சம். மலைத்தென்றல் 2017 நான்காவது ஆண்டாக மணம் கமழப்போகும் மலைத்தென்றல் எதிர்வரும் புரட்டாதி 17ம் திகதி (17.09.2017) நடைபெறவூள்ளது. பரதம், நாடகம், நடனங்களுடன் நடைபெறவூள்ள “மலைத்தென்றல் 2017” இல் வழமை போன்று மலைத்தென்றல் நூல் வெளியீடும் நடைபெறவூள்ளது. ஊவா வெல்லஸ்ஸ விரிவூரையாளர்கள், மாணவர்களின் ஆக்கங்களுடன் வெளிவரும் மலைத்தென்றல் நூல் இம்முறை பிற பல்கலைக்கழக மாணவர்களின் ஆக்கங்களையூம் சுமந்து வரவூள்ளது. மேலும் நாடு தழுவி பரந்துள்ள தமிழர்களை ஒருமிக்கும் வண்ணம் கலைத்திரள், கண்வழியே போன்ற புதிய பரிணாமங்களையூம் வியாபித்துள்ளது.

கலைத்திரள் : இலங்கை பூராகவூமுள்ள தமிழ்மொழி பேசும் மாணவர்களின் மொழியாற்றலை வளர்க்கும் நோக்குடன் கலைத்திரள் எனும் புதிய அம்சம் 2017இல் அறிமுகமாகிறது. அகில இலங்கை ரீதியில் பாடசாலை மாணவர்களிடையே கவிதைஇ கட்டுரைப் போட்டிகளை நடாத்தி வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசில்களை அளித்து கௌரவிப்பதன் மூலம் அவர்களின் மொழிப்பற்றை அதிகரிக்கச் செய்தலும், அவர்களின் கலையினை வெளித் திரளச் செய்வதும் கலைத்திரளின் நோக்கமாகும். கலைத்திரளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு மலைத்தென்றல் நிகழ்வில் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்படவூள்ளன. எதிர்வரும் காலங்களில் கவிதை, கட்டுரைப் போட்டிகள் மட்டுமன்றி பாடசாலை மாணவர்களின் ஓவியம், நடனம், நாடகம் உட்பட்ட கலைகள் பலவற்றையூம் வெளிப்படுத்தவூம், அவர்களை ஊக்குவிக்கவூம் மலைத்தென்றலும் கலைத்திரளும் நிச்சயம் களம் அமைத்துக் கொடுக்கும். கண்வழியே..

நாடு பூராகவூமுள்ள புகைப்படக்கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொணரவூம்இ அதனூடாக தமிழர் நமதும்இ நம் நாட்டினதும் அழகையூம் புகழையூம் பறைசாற்ற வழி செய்வதே “கண் வழியே..” புகைப்படப் போட்டியின் நோக்காகும். திறந்த போட்டியாக நடைபெறவூள்ள இப்போட்டியில் யாரும் பங்குபற்ற முடிவதுடன்இ வெற்றியாளர்களுக்கு மலைத்தென்றல் நிகழ்வில் விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படவூள்ளன. தொன்மை மட்டும் பேசி நிற்காமல் புதுமையினை கையாண்டு மொழியினை வளர்ப்பதற்கும்இ கலை கலாசாரம் மற்றும் நிகழ்வூகளை ஆவணப்படுத்தவூம் “கண்வழியே..” கோலும். காலங்கள் மாறினாலும் எமது கலைகளும்இ கலாசாரமும்இ பண்பாடுகளும் என்றும் மாறாதிருக்க வேண்டும். மலைத்தென்றல் மூலம் அவற்றைக் கட்டிக்காப்பதுடன், தமிழ் பேசும் மக்களிடையே மொழிப்பற்றையூம், வாழ்வியலையூம் கட்டியெழுப்பவதுடன்இ ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணர்ந்து அவர்களையூம், ஏனைய கலைஞர்களையூம் ஊக்குவிப்பது மலைத்தென்றலின் சிறப்பு.

உங்கள் கருத்துக்கள்