பசுமைப் பண்ணைகளில் முதலிடுவோம்!

“உணவே மருந்து ! மருந்தே உணவு ” என்ற தார்மீகப் கோட்பாடுகளுடன் இயற்கையுடன் ஒன்றித்த மனிதன் தன் வாழ்வினை திறம்பட நாடாத்தினான். பசுமையினை விட்டு செயற்கையின் பால் அவனது நாட்டம் ஆரம்பிக்க தொடங்கிய தருணம், அது சார் பக்கவிளைவுகளுக்கு முகம் கொடுக்க நேருடுகின்றது.

செயற்கை உணவூட்டலில் வளர்க்கப்படும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட இறைச்சிக்கோழிகளை (புறொயிலர்) உண்பதால் குருதிக் கொலஸ்திரோல் அதிகரிப்பு முதற்கொண்டு மாரடைப்பு வரை ஏற்படலாம். அதேபோல ஹார்மோன்கள் கலந்த மாஸ் உணவில் வளர்க்கப்படும் முட்டைக்கோழிகளின் முட்டைகளும் பல்வேறு நோய்களைத் தூண்டுகின்றன. பருவவயதிற்கு முன்னரே பூப்படைதல், பெண்களின் மீசை அரும்புதல் போன்ற விரும்பத்தகாத விளைவுகளிற்கு இவ்வகை முட்டைகளே காரணமாகும்.

பாரம்பரிய நெல்லினங்கள் முதற்கொண்டு நாட்டுப் பசுக்களின் பால் (A2) நாட்டுக் கோழி/வாத்தின் முட்டை/இறைச்சி போன்றவை பாதுகாப்பானவை, உடலாரோக்கியத்திற்கு உகந்தவை என மக்கள் உணர்ந்துவரினும் இவற்றினைக் கொள்வனவு செய்தல் இயலாததொன்றாகியுள்ளது. பல தசாப்தங்களாக நாட்டு இனங்களைப் புறக்கணித்ததன் காரணமாக அவ் இனங்கள் பெரிதும் அருகியுள்ளன. எனவே நாட்டுக்கோழி மற்றும் வாத்துக்களைக் கொண்ட பசுமைப் பண்ணையொன்றினை சுவடி நிறுவகம் ஆரம்பித்துள்ளது.மேலும் இயற்கை விவசாயத்தினை ஊக்குவிக்கும் நோக்குடன் மண்புழு வளர்ப்பினையும் ஆரம்பித்துள்ளது.
சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட இப்பணி வளர்ந்து சிறக்க ஆர்வமுள்ள அனைத்துத் தமிழ் உறவுகளினதும் ஒத்துழைப்பை நாடி நிற்கிறோம். இத்திட்டத்தில் முதலிடுவதன் மூலம் மனநிறைவான வருமானம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதோடு வடக்கில் சுயசார்புப் பொருளாதாரத்தை மீள்கட்டுமானம் செய்யும் முயற்சிக்குக் கைகொடுப்பீர்.

#எமை_ஆள்வது_அறம்!
#எம்_வாழ்வது_தமிழ்!!

பசுமைத் தாயகம்
51/3, பொற்பதி வீதி கொக்குவில் கிழக்கு
யாழ்ப்பாணம்

உங்கள் கருத்துக்கள்