இன்றைய மாணவ சமூகத்தின் கனவுகள் மெய்ப்படவேண்டும்

இன்றைய நவீன காலகட்டத்தில் இளைஞர்கள் மற்றும் யுவதிகள் தமது எதிர்காலம் பற்றிய கனவுகளினை அவர்களது பருவமடைந்த வயது முதல் உருவாக்கிக்கொள்ள வேண்டும். ஒருவன் தனது வாழ்நாளில் கற்பனை காணும் பொழுது அவனது ஆழ்நிலை மனத்தில் (Subconscious mind) பதிந்துள்ள சம்பவங்கள் சாதகமானதாகவோ அன்றி பாதகமானதாகவோ வெளிப்படுத்தப்படும் ஒருபொறிமுறை தான் கனவு.

இந்த கனவினை ஒருவன் தான் எதிர்காலத்தில் எவ்வாறு உருவாக வேண்டும் என்பதனை கனவு காணமுடியும். மாணவர்களினது குழந்தைப்பருவ விளையாட்டுகளின் மூலம் அவர்கள் சார்ந்த சூழல் மற்றும் பெற்றோர்கள் அவர்களது சிந்தனை துாண்டல் முறமையினை இலகுவாக அறிந்து கொள்ள முடியும்.

இன்றைய காலகட்டத்தில் இயந்திரங்களினது பாவனையும், தகவல் தொழிநுட்ப துறையினது துரித வளர்ச்சியும் எமது மாணவர்களினது கனவுகளினை வெறுமையானதாகவே காட்ட முற்படுகின்றன. நாம் இன்றைய உலகினது போக்கிற்கு ஏற்ப எமது கற்றல் தேவைகளினையும் அதனை அடைவதற்கான முன்முயற்ச்சிகளினையும் உருவாக்க வேண்டிய பல சந்தர்ப்பங்களினை தவறிவிட்டுள்ளோம். அதற்கு எமது கற்றல் கொள்ளைகள் மற்றும் ஸ்திரமற்ற இலங்கை அரசியல் கொள்ளைகளும் ஒரு மறைமுக காரணகர்த்தாக்கள்.


மாணவர்களினது கற்றலில் இன்றைய போக்கு :-

இன்று வடக்கும் மற்றும் கிழக்கில் கல்வியே ஒரு மூலதனம் என கனவு காணும் பெற்றோர்களுக்கு மாணவர்களினது அறுபடை அதாவது பரீட்சைகளில் சித்தி பெறுவதே இலக்காக உள்ளது. இதில்
குறிப்பிட்டுக்கூறக்கூடிய விகிதாசாரத்தினர் மட்டும் தனது உயர் பெறுபேறுகளினைப் பெற்று தமது க.பொ.த உயர்தரம் கல்வியினை தொடர்கின்றனர். அதேபோல் உயர்தரத்தில் நல்ல பெறுபெறுகளினைப் பெற்றவர்கள் மட்டுமே பல்கலைக்கழக மாணிய ஆணைக்குழுவினது விகிதாசார அடிப்படையில் அவர்களினது பல்கலைக்கழக உள்நுழைவு அனுமதியினைப்பெற்று ஒருசிலர் தமது உயர்கல்வியினை இலங்கையிலுள்ள 14 பல்கலைக்கழகங்களிலும் மற்றும் கல்வியல் கல்லுாரிகளிலும் கற்றுக் கொள்ளும் வாய்ப்பின பெற்றுக்கொள்கின்றனர். இதில் மாகாண தெரிவு அடைப்படையில் 1/3% மட்டுமே தெரிவு செய்யப்படுகின்றனர்.

ஏனையவர்களுக்கான தனியார் கற்றலுக்கான சந்தர்ப்பங்கள் மிகக்குறைவானதாகவே காணப்படுகின்றது. இருப்பினும் இலங்கை அரசினது 3ம் தர நிலைக்கல்வி அங்கீகாரத்துடன் இயங்குகின்ற பல அதிகாரசபைகள்
மற்றும் தொழினுட்ப கல்லுாரிகளில் ஒருசிலர் தமது மேற்கல்வியினை பயின்று பல்கலைக்கழக கல்விக்கு சமமான டிப்ளோமா (Diploma) மற்றும் பட்டப்படிப்பினை (Degree) பெற்றுக்கொள்ள கூடிய சமசந்தர்ப்பங்களும் உள்ளன.

இவ்வாறான கற்றல் வாய்ப்பிற்கான சமசந்தர்ப்பங்கள் அல்லது பரீட்சை தெரிவுகளின் மூலம் சந்தர்ப்பங்கள் கிடைக்கப்பெறாத மாணவ மற்றும் மாணவியர்கள் வெளிவாரி பட்டதாரிகள் கல்வியினுாடாக தமது யாழ் மற்றும் பேரதனியா பல்கலைக்கழகங்களிற்கான அனுமதிக்கப்பட்ட நிறுவனங்களின் ஊடாக பட்ட படிப்பினை (External degree program) மேற்கொள்ளுகின்றனர்.

ஒரு சிலர் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் பட்டசான்றிதழ் கல்வியினை (Foreign affiliated diploma/ degree program) யாழ் மற்றும் கொழும்பின் புறநகர் பகுதிகளில் பல இலட்சங்களினை செலவு செய்து பயின்று வருகின்றனர்.

ஒரு பகுதி மாணவர்கள் பெற்றோர்களினது பணத்தினை செலவு செய்து தனியார் கணணி கல்லுாரிகளில் கணணி தொடர்பாக 06 மாதங்களிற்கான கற்கை மற்றும் அதற்கு குறைவான கற்கைகளினை பூர்த்தி செய்து
கொள்கின்றார்கள்.

மற்றும் ஒரு சாரார் மேற்கூறப்பட்டுள்ள வாய்ப்புக்கள் கிடைக்கப்பெறாத சந்தர்ப்பத்தில் எவ்வாறு தமது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்வது என்ற தொழில் கற்கைசார் வழிகாட்டல்கள் (Career guidance and counseling) சரியான முறையில் வழங்கப்படாத சந்தர்ப்பங்களில் தமது எதிர்காலம் தொடர்பான கனவுகள் நிறைவேறாத ஆசைகள் என்றே கூறுகின்றார்கள்.

அந்த கனவினை நனவாக்கக்கூடியவர்கள் சிறுவயதினில் கற்றலுக்கான அடுத்த கட்ட நடவடிக்கை தெரியாது நாடு விட்டு நாடு சென்று கூலித்தொழிலாளிகளாகவும், பணிப்பெண்களாகவும் பலர் நமது நாட்டிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளிற்கு சென்று தொழில் புரிந்து பல இலட்சம் அண்ணிய செலவாணியினை ஈட்டிக்கொடுக்கின்றனர். இதனுாடாக பல மன உழைச்சல்களுக்கு ஆளாகி தமது செந்த நாட்டிற்கு திரும்பிச் சென்று நடைப்பிணமாக வாழ்ந்து வருகின்ற சந்தர்ப்பங்களினையும் நீங்கள் கடந்த காலங்களில் ஊடகங்களின் ஊடாக அறிந்திருப்பீர்கள்.

நாம் எவ்வாறு எமது எதிர்காலத்தினை உருவாகப்போகின்றோம்?

கடந்த 04 தசாப்த கால யத்த வாழ்வியலில் நாம் எமது உரிமைகளினையும், கல்வி சாம்பிராட்சியத்தில் அடையப்படவேண்டிய பல
சாதனைகளினையும் இழந்த நாம் எவ்வாறு இன்றைய போட்டிகள் நிறைந்த தகவல் தொழிநுட்ப உலகில் வாழப்போகின்றோம் என்பதனை கனவு காணுங்கள்.

இளைஞர்களே! கனவுகாணுங்கள் நீங்கள் தான் இந்த நாட்டின் நாளைய தலைவர்கள் என்று – அப்துல் கலாம் கூறியது போன்று நீங்களும் கனவு காணுங்கள்.

அதுமட்டுமன்றி எமது அண்டைய நாடுகளில் பின்பற்றுகின்ற பொறிமுறைகளினையும் நாமும் பின்பற்ற வேண்டும். குறிப்பாக எமது
அண்டைய நாடாகிய இந்தியாவினது கல்வியல் முறைமைகளினை நாமும் கற்றுக்கொள்ள முனைதல் வேண்டும். அவர்களது Public Private Partnership approach (PPP) மூலம் பல தனியார் கல்லூரிகளின் செல்வாக்கு உருவாக்கம் பெற்றுள்ளது. அதுமட்டுமன்றி தமது கற்றல் கொள்ளைகள் மற்றும் அதனை நடைமுறைப்படுத்தவதற்கான அரச அங்கீகாரங்களினைப் பெற்று மிகச்சிறந்த பெறுபேற்றுடன் அவர்கள் உலக வல்லரசாகிய அமெரிக்காவுடனான தொழில் வாய்ப்புத் தொடர்பினை ஏற்படுத்தும் அளவிற்கு அவர்களது கற்றல் கொள்கைகள் மற்றும் பெறுபேறுகள் அமைந்துள்ளன.

இங்கு குறிப்பாக தகவல் தொழினுட்பம் (Information Technology), ஆராய்ச்சி கற்கைகள் (Research studies) மற்றும் இயந்திர கற்கைகள் (Mechanical studies) செல்வாக்குப் பெற்ற துறைகளாக விளங்குகின்றன. இதன் மூலம் தத்தமது நாடுகளிலிருந்த வாறே மேலைத்தேய நாடுகளிற்கான வேலைகளினை குறைந்த செலவீனங்களில் வழங்கக்கூடியதாக உள்ளார்கள். இதனால் பல வாய்ப்புக்கள் இந்தியா நாட்டிற்கு வெளிநாட்டு கம்பனிகளினால்
வழங்கப்படுகின்றது.

அரசு மற்றும் தனியார் முதலீட்டாளர்கள் சிந்திக்கவேண்டியவை:-

குறிப்பாக நாம் எமது வாழ்நாளில் எதிர்கால சமூதாயத்தினை (Future Community) கட்டியாளப்போகின்ற மாணவ சமூகம் (Student Society) அடுத்த கட்ட நகர்வு எவ்வாறு அமையவேண்டும் என்ற விடயத்தினை திட்டமிடுதல் (Future planning) வேண்டும். இதில் அரசு மற்றும் முதலீட்டாளர்களினது பங்களிப்பு மிகமக்கியமானதாகும். இவ்வாறான திட்டமிடலில் பின்வரும் காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன.

1. எதிர்கால தொழில் கற்கை முறைமைக்கான சிந்தனை ( Vocational Tradestudy through)

2. தொழில் முனைவோருக்கான கற்றல் கற்பித்தலில் புதிய கொள்கைபகுப்பாய்வு

3. ஆராய்ச்சிக்கான கற்றல் பாடவிதானங்கள்

4. பாரம்பரிய கற்றல் பாடவிதானங்களிகனது செல்வாக்கினை குறைத்துக்கொள்ளுதல்

5. ஆங்கிலக்கல்வியின் ஊடான சிறுபாரய கற்றல் மற்றும் கற்பித்தல் கொள்கை பகுப்பு மற்றும் அமுலாக்கல்

6. உயர்தர கற்கைகளின் போது தொழில் துறை சார் வேலை அனுபவம் (Co-op program) மற்றும் தொண்டர் அடிப்படையிலான (voluntary hours) சேவையில் மாணவர்களினை ஈடுபடவைத்தல்.

7. நிர்ணயிக்கப்பட்ட தரமான தனியார் கல்லுாரிகளுக்கான முதலீட்டு வாய்ப்புக்களினை உருவாக்குதலும் அதற்கான கற்றல் மற்றும்
பெறுபேற்று தரத்தினை உறுதிப்படுத்தல்

8. பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கான அறிவு ஊட்டல் கருத்தரங்குகள்

9. வெளிநாடுகளில் வேலையின் நிமித்தம் செல்லக்கூடிய திறனானர்களினை (Skilled worker) nஉருவாக்குதல்

10. அரச துறைசார் வேலைகளுக்கு சமனான வேலைவாய்ப்புக்களிகனை தனியார் மற்றும் சுயதொழிலாளர்களுக்கு உருவாக்குதல். விசேட திட்டங்களினை வழங்குதலும், பொருளாதார மேம்பாட்டினை பேணுதலும் (Develop the entrepreneurship program)

11. சுற்றுலாத்துறை மற்றும் சுகாதார கல்வியினது தொழில் சார் கற்றல் சேவையினை மேம்படுத்தல் ( Develop the Hotel industrial and Caregiver study Program)

12. மத்திய வங்கிக்கொள்கைகளும், பிறநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாட்டு கற்கைகளுக்கான இலகு கடன் திட்டங்களினை மத்தியவங்கிகளினுாடாக நிதி நிறுவனங்கள் அல்லது பிரதேச வங்கிகளின் ஊடாக வழங்குதல்)

13. வெளிநாட்டு துாதரங்களுடனான அரச புரிந்துணர்வு

தொடரும்…

யாழ்ப்பாணத்தினை சொந்த ஊராகக் கொண்ட கனடா வாழ் தமிழன். கனடாவிற்கு சட்ட ரீதியாக குடிபுகுவதற்கான ஆலோசனை மையத்தினை யாழ் நகரில் நடாத்திவருபவர். சமூகம் சார் செயற்பாடுகளிலும் பின் நிற்பதில்லை. தனது விடா முயற்சியினால் தனக்கானதொரு அடையாளத்தினை நிலை நிறுத்தி வைத்திருப்பவர். – CEO at Can Lanka Immigration Services
உங்கள் கருத்துக்கள்