கிளைமத்தோன் – பாடசாலை மாணவர்களுக்கான போட்டிகள்

அதிகரித்து வரும் காலநிலை மற்றும் சூழலியல் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பான ஆக்கமிகு தீர்வுகளுக்காகவும் விழிப்புணர்வு செயற்பாடுகளுக்காகவும் ‘Climathon – கிளைமத்தோன்”  நிகழ்வானது எதிர்வரும் நவம்பர் மாதம் 13,14,15ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இது ஒரு சர்வதேச நிகழ்வாகும். இந்த நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் பாடசாலை மாணவர்களுக்கிடையேயான சித்திரம், ஆக்கம் மற்றும் கட்டுரை போட்டிகளை சிறகுகள் அமையத்தின் ஊடாக நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பாடசாலை மாணவர்களை பங்குகொள்ள ஆர்வப்படுத்துமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

உங்கள் ஆக்கங்களை தபால் மூலம் உங்கள் பிரிவு மற்றும் போட்டித் தலைப்பினை இட்டு கீழ்காணும் முகவரியிற்கு நவம்பர் 10ஆம் திகதிக்கு முன் கிடைக்கக்கூடிய வகையில் அனுப்பி வைக்கவும்.

போட்டிகளில் பங்குபெறும் மாணவர்களுகான சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் இறுதி நாள் நிகழ்வில் வழங்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி

தாக்சாயினி செல்வகுமார் (ஒருங்கிணைப்பாளர்)

சிறகுகள் அமையம்

இலக்கம் 7, 3ஆம் குறுக்குத்தெரு

கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்

மேலதிக விபரங்களுக்கு:  077 975 9402 | 0765534202 | 0778864029

கட்டுரைப்போட்டி

நிபந்தனைகள்

  1. கட்டுரைகள் A4 தாளில் ஒரு பக்கத்தில் மட்டும் எழுதப்பட வேண்டும்.
  2. நீலம் அல்லது கறுப்பு நிற பேனா மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும்.
  3. 1cm இலான வெளிக்கோடு (outline)ஏற்றுக் கொள்ளப்படும்.
  4. கொடுக்கப்படும் தலைப்புகளில் ஏதாவது ஒன்றை தெரிவு செய்து எழுதலாம்.
  5. பங்குபற்றும் அனைவரிற்கும் சான்றிதழ்களும் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பெறுபவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்படும்.
  6. பங்குபற்றும் போட்டியாளர்களின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், பாடசாலை, தரம் ஆகியன தெளிவான முறையில் குறிப்பிடப்பட வேண்டும்.
  7. கட்டுரைகள் அனுப்ப வேண்டிய இறுதித் திகதி – 10.11.2020

கட்டுரைப் போட்டிகள் கீழ்வரும் வயதுப்பிரிவுகளில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

தரம் 6-8 தற்போதைய காலநிலை மாற்றங்களும் மனித தலையீடுகளும். 500-600 சொற்கள்

தரம் 9-11 எதிர்காலச் சந்ததிக்கு நஞ்சற்ற  பாதுகாப்பான குடிநீர் மற்றும் உணவு. 600-800 சொற்கள்

தரம் 12-13 மரபார்ந்த காலநிலை முகாமைத்துவமும் நவீன காலநிலை முகாமைத்துவமும் 800-1000 சொற்கள்

திறந்த பிரிவு இலங்கை சுற்றாடல் முகாமையில் திண்மக்கழிவுகளின் வருகையும் இருப்பும் மீள்சுழற்சியும். 1000 -1500 சொற்கள்

சித்திரப்போட்டி | ஆக்கப்போட்டி

நிபந்தனைகள்

  1. பங்குபற்றும் அனைவரிற்கும் சான்றிதழ்களும் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பெறுபவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்படும்.
  2. பங்குபற்றும் போட்டியாளர்களின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், பாடசாலை, தரம் ஆகியன தெளிவான முறையில் குறிப்பிடப்பட வேண்டும்.
  3. ஆக்கங்கள் அனுப்ப வேண்டிய இறுதித் திகதி – 10.11.2020

சித்திரப் போட்டிகள் 

தரம் 1-3

மரம் வளர்ப்பதானல் ஏற்படும் நன்மைகள்

மரம் வளர்ப்போம்; பயன் பெறுவோம்..

ஆக்கப் போட்டிகள் 

தரம் 4-5

ஆக்கங்கள் கழிவுப்பொருட்களைக் கொண்டு ஒட்டுச் சித்திரமாக இருக்க வேண்டும். கழிவுப்பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படும் கைவேலைப்பாடுகள்  A4 தாளில் ஒட்டப்பட்டு அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.

 

 

உங்கள் கருத்துக்கள்